தொடர்புக்கு: +91 99620 47473

எங்களை பற்றி

வணிகத்தின் வளம் – சமூகத்தின் நலம்" என்பதே எங்கள் பேரவையின் அடிப்படை சிந்தனை!

எழுச்சி நாயகன் திரு. டைமன் ராஜா, தற்போதைய மாநில தலைவர், வணிக தந்தை த. வெள்ளையன் அவர்களின் பாதையில் நடந்து, பேரவையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும் வழிகாட்டியாக திகழ்கிறார்.

தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரவை, இன்று டைமன் ராஜா அவர்களின் வழிகாட்டுதலுடன், வணிக உரிமைகளை காக்க, வணிகர்களின் பொருளாதார நலன்களை உயர்த்த, சமூக சேவைகளை செயல்படுத்த மற்றும் வணிகர்கள் மீதான சட்டமீறல் நடவடிக்கைகளை எதிர்த்து சக்திவாய்ந்த அமைப்பாக வளர்ந்து வருகிறது.

தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரவை, வணிக சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கவும், உள்நாட்டு பொருட்களை ஊக்குவிக்கவும், வணிக வளர்ச்சிக்காக ஒற்றுமையான போராட்டங்களை முன்னெடுக்கவும் உருவான ஓர் அமைப்பு.

இதன் அடித்தளம் உண்மையான மக்கள் சேவை மற்றும் சுதேசி பொருட்களின் வளர்ச்சி என்பதில் நிலைத்து நிற்கிறது.

வணிக சமூகத்துக்காக தெளிவான, வலிமையான குரலாக உருவெடுத்துள்ளார்.
சிறிய, நடுத்தர வணிகர்களின் சிக்கல்கள், வரி பிரச்சனைகள், காப்பீட்டுத் திட்டங்கள், பாதுகாப்பு, நியாய விலை போன்றன தொடர்பாக அரசு நிலையை கேட்கக்கூடிய வீரத்துடன் செயல்படுகிறார்.
பொதுமக்களுக்கு நன்மை தரும் திட்டங்கள், சமூக சேவைகள், விரைவான தொழில்முனைவோர் உதவிகள் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறார்.
இளைஞர்களை வணிக துறையில் ஊக்குவிக்க, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளார்.

வணிகத்திற்கு உரிமை – சமூகத்திற்கு சேவை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாட்டில் வணிகர்களுக்காக, வணிகர்களை காக்கவும், வணிகர்களுக்காக குரல் கொடுக்கவும் வணிகர் சங்கங்களை ஒருங்கிணைத்து பேரவை தலைவர் த. வெள்ளையன் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை.

வணிகர்களின் நலன்களை பாதுகாக்க, அவர்களின் தொழில்வளர்ச்சிக்கு ஆதரவளிக்க மற்றும் சமூகத்தில் ஒரு வலுவான, ஒற்றுமையுடன் கூடிய வணிக சமுதாயத்தை உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம்.